சர்க்கரை நோயாளிகள் இட்லி சாப்பிடக்கூடாதா?
இன்றைய இளைய தலைமுறை முதல் பெரியவர்கள் வரை சர்க்கரை நோய் பாடாய்படுத்தி வருகிறது. சர்க்கரை நோய் வந்து விட்டால் இனி மாத்திரை, இன்சூலினை கதியாக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.
மேலும், சர்க்கரை பக்கமே போகக்கூடாது என்றும் சொல்வார்கள். ஆனால் இதையெல்லாம் யாரும் நம்பவே வேண்டாம். உணவே மருந்து என்று சொல்வார்கள். நாம் நல்லமுறையில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால் எந்த நோயாக இருந்தாலும் அதை விரட்டி அடித்துவிட முடியும்.
ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலே சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். உடல் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு சத்தான உணவுகளை சாப்பிட்டு வந்தால் மாத்திரை, ஊசி இல்லாமல் சர்க்கரை நோயை குணப்படுத்திவிட முடியும்.
சரி வாங்க... சர்க்கரை நோயாளிகள் இட்லியை சாப்பிடலாமா என்று பார்ப்போம் -
தென்னிந்தியாவில் காலையில், இரவிலும் இட்லியை சாப்பிட்டு வருகிறார்கள். ஏன் காலையில் இட்லி, இரவில் இட்லியை சாப்பிட்டு வருகிறார்கள் என்றால் இட்லி சீக்கிரமாக ஜீரணமாகிவிடும்.
அதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இட்லியை விரும்பி சாப்பிடுகிறார்கள். சிலர் சர்க்கரை நோயாளிகள் இட்லியில் கலோரி இருப்பதால் அதிகமாக சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள்.
ஆனால், இட்லியாக சாப்பிடாமல், சர்க்கரை நோயாளிகள் ரவா இட்லி, ராகி இட்லியை சாப்பிடலாம். இந்த இட்லிகளை சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாது.
சர்க்கரை நோயாளிகள் தேங்காய் சட்னியை சாப்பிடுவதை விட, தக்காளி சட்னி, சாம்பாரை தொட்டு சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |