சர்க்கரை நோயாளிகளுக்கு அரு மருந்தாகும் எலுமிச்சை - காலையில் எப்படி சாப்பிடலாம்?
சர்க்கரை நோய் வந்தவர்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டியது உணவு கட்டுப்பாடு தான், இந்நோய் வந்துவிட்டாலே பல உணவுகளை தவிர்த்துவிட வேண்டும்.
அந்த வகையில் வைட்டமின் சி சத்து நிறைந்த சிட்ரஸ் பழமான எலுமிச்சையில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுவதற்கான வழிகள் உள்ளது. அதன்படி எலுமிச்சையில் வைட்டமின்-சி, நார்சத்து, ஆன்டி-இன்ப்ளமேட்டரி, ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
எலுமிச்சை குறைந்த அளவு கலோரியை கொண்டுள்ளதால் இது அனைத்துவிதமான நபர்களுக்கும் சிறந்த பலனளிக்கிறது. மேலும், எலுமிச்சையில் வைட்டமின்-சி, நார்சத்து, ஆன்டி-இன்ப்ளமேட்டரி, ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
எலுமிச்சை குறைந்த அளவு கலோரியை கொண்டுள்ளதால் இது அனைத்துவிதமான நபர்களுக்கும் சிறந்த பலனளிக்கிறது. அரிசி முதல் கறி, பாஸ்தா வரை எந்த உணவிலும் சில துளிகள் எலுமிச்சை சேர்க்கலாம்.
இது உணவுக்கு ஒரு நல்ல சுவையையும் நறுமணத்தையும் தருகிறது, மேலும் எலுமிச்சையை சாலட்களில் கலந்து சாப்பிடுவது கூடுதல் சுவையை தருகிறது. தொடர்ந்து, தினமும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு பருகுவது சிறந்தது.
இந்த பானத்தை தயாரிப்பதும் எளிது. தண்ணீரை மிதமான வெப்பநிலையில் வைத்துக்கொண்டு, அதில் அரை எலுமிச்சை சாறை சேர்க்கவும். எலுமிச்சை நீரைத் தயாரிக்கும் போது வெந்நீரைப் பயன்படுத்தாமல் இருக்கலாம்.
எலுமிச்சை சாறு சேர்க்க மற்றொரு ஆரோக்கியமான வழி சாலட், இது சாலட்டின் சுவையை அதிகரிக்கிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது.
சாலட்டில் மிதமான அளவு எலுமிச்சை சாற்றை சேர்த்தால் போதும், அதிகப்படியான எலுமிச்சை அமிலத்தன்மையை உருவாக்கும் என்பதால் அதை மிதமான அளவில் சாப்பிடுங்கள்.
மாவுசத்து நிறைந்த அரிசி, உருளைக்கிழங்கு, பீட்ரூட் மற்றும் சோளம் போன்ற உணவுகளில் எலுமிச்சை சாற்றை சேர்க்கலாம். இது உடலில் ஆரோக்கியமான சமநிலையை தூண்டி ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைத்திருக்கிறது.