இதை தினமும் 1 கப் டீ குடிச்சா சர்க்கரை நோய் வாழ் நாளில் வராதாம்! 2 நிமிடத்தில் தயாரிக்கலாம்
சர்க்கரை நோய் இன்று மிக பெரிய ஆபத்தாக உருவெடுத்துள்ளது.
இதனை கட்டுப்படுத்த சிகிச்சை முறையை தாண்டி உணவுப்பழக்கம் தான் முதல் மருந்தாக இருக்கின்றது.
சில உணவு மற்றும் பானங்களின் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பானங்களில் டீயும் ஒன்று.
இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பிளாக் டீ
டீக்களில் பல வகைகள் உண்டு. அதிலும் பிளாக் டீ , க்ரீன் டீ போன்றவை சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக சமீபத்தில் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு நாளில் ஒன்றிலிருந்து மூன்று கப் டீ அருந்தும் நபர்களுக்கு டைப் 2 சர்க்கரை அபாயம் 4 சதவீதம் குறையுமாம்.
இதற்கு காரணம் பாலிபீனால்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடண்டுகள் தானாம்.
மேலும் க்ரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கூறுகள் இன்சுலின் குறைபாட்டை சரி செய்வதற்கு உதவுகிறதாம்.
சுவையான பிளாக் டீ போடுவது எப்படி?
தேவையாள பொருட்கள்
- டீத்தூள்
- பால்
- தண்ணீர்
பிளாக் டீ தயாரிப்பு
பாத்திரத்தினை அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் டீத்தூளை மட்டும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
ஒரு டம்ளர் தண்ணீருக்கு ஒரு தேக்கரண்டி டீத்தூள் போதும்.
2 நிமிடம் சென்றதும் இறக்கி வடிகட்டினால் பிளாக் டீ ரெடி.
இதனுடன் கால் மூடி எலுமிச்சம் பழம் பிழிந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு கட்டுப்படும்.
முடிந்தவரை சர்க்கரை சேர்க்காமல் துவர்ப்பாக இருப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
எச்சரிக்கை....
நீங்கள் சர்க்கரையை கட்டுப்படுத்துகிறேன் என்ற பெயரில் நாலு கப் க்ரீன் டீ குடிப்பதில் பிரச்சனை இல்லை. நாலு கப் டீக்கும் சர்க்கரையை அள்ளி போட்டுக் கொண்டால் எந்த வித நல்ல முடிவையும் தராது.
இது போன்ற புது முயற்சிகளை சுகர் நோயாளரிக் துவங்குவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்ளுங்கள்.