சர்க்கரை நோயாளிகளின் இன்சுலின் அளவை கட்டுப்படுத்தும் பானம்! மிஸ் பண்ணிடாம பாருங்க...
இன்றைய காலக்கட்டத்தில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது கூடவே குளுக்கோஸ் அளவும் அதிகரித்துவிடுகிறது.
கவலை வேண்டாம். வினிகர் மூலம் செய்யப்படும் பானத்தை குடித்து வந்தால் உங்களுடைய இன்சுலின் அளவை குறைத்து விடலாம்.
1. ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகருடன், ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து கொள்ள வேண்டும். இந்த பானத்தை சாப்பிடுவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே குடிக்க வேண்டும். இப்படி குடித்து வந்தால் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதை தடுக்கும்.
2. டயாபட்டீஸ் பிரச்சனை இருப்பவர்களும் இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வாருங்கள். ஆனால், ஆப்பிள் சைடர் வினிகரை அப்படியே சாப்பிடக்கூடாது. தொண்டை எரிச்சல், பற்கள், வயிற்றில் பிரச்சினை ஏற்படும்.
3. ஆப்பிள் சைடு வினிகர் எல்லா நபருக்கும் இதுபோல் பிரச்சினை உண்டு செய்துவிடும் என்று சொல்லமுடியாது. சிலருக்கு மட்டுமே இந்த மாதிரியான பிரச்சினையை ஏற்படுத்தும். வினிகரில் அசிட்டிக் ஆசிட் இருப்பதால், இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி கார்போஹைட் உணவுகளை செரிமானத்தை குறைக்கிறது. இதனால், ரத்த அளவு அதிகரிக்காமல் கட்டுப்படும்.
4. நீங்கள் ஆப்பிள் சைடு வினிகரை பருக வேண்டும் என்றால், முதலில் மருத்துவமனை அணுகி ஆலோசனை பெற வேண்டும். நீங்கள் வேறு காரணங்களுக்காக மாத்திரைகளை உட்கொண்டு வந்தால் ஆப்பிள் சைடு வினிகரை பருக கட்டாயமாக மருத்துவரிடம் கேட்க வேண்டும்.
5. செரிமான பிரச்சனைகள், ஆசிட் ரிஃப்லெக்ஸ், அல்சர், குறைந்த பொட்டாசியம் அளவுகள் மற்றும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆப்பிள் சைடு வினிகரை பருகுவதை தவிர்க்க வேண்டும்.
6. ஆப்பிள் சைடர் வினிகர் ரத்த சர்க்கரை மட்டுமே கட்டுப்படுத்தும். ஆனால், ஆரோக்கியமான உணவு, மருந்துகள் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |