விஜய்–த்ரிஷா பெயரை சொல்லாமல் கலாய்த்த மலையாள நடிகர் - படு வைரலாகும் வீடியோ!
நான் முதல்வராக பதவியேற்கும் போது நவ்யா நாயர் முன்வரிசையில் இருக்கணும் என விஜய்–த்ரிஷா பெயரை சொல்லாமல், மலையாள நடிகர் தியான் ஸ்ரீநிவாசன், தனது வரவிருக்கும் 'விசிட்டர்' (Visitor) திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நகைச்சுவையாக பேசிய விடயம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிநிகழ்ச்சியில், தமிழக முதல்வர் விஜய்யின் அரசியல் பயணத்தை நகைச்சுவையாக குறிப்பிட்ட தியான், தமிழக முதல்வர் விஜய் மற்றும் த்ரிஷாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாதல் கலாய்க்கும் வகையில் நகைச்சுவையாக பேசினார்.

வைரலாகும் காணொளி
மேலும், தனது நண்பரும் சக நடிகருமான அஜு வர்கீஸ், முதலில் நடிகர் சங்கத் தலைவராக வேண்டும் என்று தனக்கு அறிவுரை கூறியதாகவும், பின்னர் அந்தச் சங்கத்தில் நிலவும் சர்ச்சைகளால் அந்தப் பொறுப்பையும், முதலமைச்சர் பதவியையும் தவிர்த்து ஆளுநர் பதவியே தனக்குப் பொருத்தம் என அஜு நகைச்சுவையாகக் கூறியதாகவும் தெரிவித்தார்.
பேச்சின் இறுதியில், "நான் கேரள முதலமைச்சராகப் பதவியேற்கும்போது, 'விசிட்டர்' பட நடிகை நவ்யா நாயர் புடவை அணிந்து, கண்களில் கண்ணீருடன் முன் வரிசையில் அமர்ந்திருக்க வேண்டும் என்பதே என் ஆசை" என்று தியான் நகைச்சுவையாகக் கூறினார்.

அதனை தொடர்ந்து மேடைக்கு வந்த நடிகை நவ்யா நாயர், "நீ முதல்வராகும் நாளில், பச்சை நிறக் கரையுடன் கூடிய வெள்ளைப் புடவை மற்றும் வைர நெக்லஸ் அணிந்து, முன் வரிசையில் அமர்ந்து கண்ணீருடன் உன்னை வாழ்த்துவேன். எனக்காக ஒரு இருக்கையை மட்டும் ஒதுக்கிவை" என்று பதிலளித்தார்.
அவரது பதிலும் அரங்கில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து பேசிய அஜு வர்கீஸ், "இனி என்னால் தமிழ்நாட்டிற்கு வர முடியாது போலிருக்கிறது. விஜய் சார், என் நண்பன் கொஞ்சம் பைத்தியமாகிவிட்டான். தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்" என்று நகைச்சுவையாகக் கூறினார்.

குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன், புதிய சர்ச்சையை கிளப்பி வருகின்றது.
ഞാൻ CM ആയി സത്യപ്രതിജ്ഞ ചെയ്യുന്ന ദിവസം. .സാരീ ഉടുത്തു ആ ഫ്രണ്ട് റോയിൽ നവ്യ ഉണ്ടാവുമെന്ന് ഞാൻ കരുതുന്നു. .!!
— Anantha_vishnu (@Ananthuavj) July 15, 2026
- Dhyan Sreenivasan
That Vijay–Trisha joke from Dhyan Sreenivasan was unexpected..🚶😂 pic.twitter.com/ICrqa590Gf
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |