குழந்தை தனமாக யோகிபாபுவை ஏமாற்றிய தோனி : வைரலாகும் க்யூட் வீடியோ!
எம்.எஸ்.தோனி
கிரிக்கெட் உலகில் ஜாம்பவனாக வலம் வருபவர் எம்.எஸ்.தோனி. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, இவருக்கு வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இவர் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிவாகை சூடி கோப்பையை கைப்பற்றியது.
தோனியின் மனைவி சாக்ஷி தன் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் லெட்ஸ் கெட் மேரீடு படத்தை தயாரிக்கிறார். இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்க, நடிகர் ஹரீஷ் கல்யாணி ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு நடிகை இவானா இணைந்து நடித்துள்ளார். இப்படத்தில், நகைச்சுவை நடிகர் யோகிபாபு, நடிகை நதியா உட்பட பலர் நடித்துள்ளனர்.
வைரலாகும் வீடியோ
தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
‘LGM’ படத்தின் நிகழ்ச்சியில் கேக்கை யோகிபாபுவும், தோனியும் இணைந்து வெட்டினர். ஆனால், யோகிபாபு வெட்டுவதற்குள் தோனி சின்ன கேக் பீஸை எடுத்து சாப்பிட்டார். உடனே, யோகிபாபு தோனியை ஒரு ரியாக்ஷன் லுக் விட்டார். இதைப் பார்த்த தோனி செம்ம க்யூட்டாக சிரிக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் தல.. தலதான்.. என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ -
MS Dhoni & Yogi Babu having fun during the audio launch of #LGM ??
— SDC World (@sdcworldoffl) July 14, 2023
#letsgetmarried #yogibabu #msdhoni #msd #harishkalyan #ivana #dhonientertainment #sdcworld pic.twitter.com/OrpDxjaaaI
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |