வெற்றி வாகை சூடிய பின் டோனி என்ன பேசியிருக்கிறார் தெரியுமா?
சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தன.
இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய டு பிளிஸ்சிஸ், மொயீன் அலி, ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர்.
அம்பத்தி ராயுடு காயம் காரணமாக ரன் எடுக்காமல் வெளியேறினார். கேப்டன் டோனி 3 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஸ் அபாரமாக விளையாடினார்.
அவருக்கு துணையாக ஜடேஜா விளையாடிய நிலையில், 33 பந்தில் 26 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அதிரடி சிக்ஸர் மன்னன் வெய்ன் பிராவோ 8 பந்தில் 3 சிக்சருடன் 23 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இறுதியில் சென்னை அணி, 20 ஓவரில் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. 41 ரன்னில் அரைசதம் அடித்த ருதுராஜ், இறுதிவரை ஆட்டமிலாமல் 58 பந்தில் 88 ரன்கள் அடித்து அசத்தினார்.
157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் டி காக் 17 ரன்னுக்கும், அன்மோல்ப்ரீத் சிங் 16 ரன்னுக்கும், சூரியகுமார் யாதவ் 3 ரன்னுக்கும், இஷான் கிஷன் 11 ரன்னுக்கும், போலார்ட் 15 ரன்னுக்கும், கருணாள் பாண்டிய 4 ரன்னுடம் ஆட்டமிழந்தனர்.
திவாரி மட்டும் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சிங்கங்கள் அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்கு பின்னர் சென்னை அணியின் கேப்டன் அளித்த பேட்டியில், 30 ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து சிக்கலான கட்டத்தில் இருந்தோம். அப்போது நாங்கள் கவுரவமான ஒரு 140 ரன்களை எதிர்பார்த்தோம்.
ருதுராஜூம், பிராவோவும் நாங்கள் எதிர்பார்த்ததை விட 160 ரன்களுக்கு அருகில் ஆட்டத்தை எடுத்து சென்று அசத்தினர். ஆடுகளம் மெதுவாக இருந்ததனால் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது.
தொடக்கம் முதல் இறுதிவரை பேட்ஸ்மேன் ருதுராஜ் பேட்டிங் செய்தது விவேகம்'' என்று டோனி தெரிவித்தார்.