MS Dhoni Birthday: மனைவி மற்றும் சல்மான் கானுடன் எளிமையாக கொண்டாடிய தோனி: வைரலாகும் காணொளி
மகேந்திர சிங் தோனி தனது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்ற பெருமை தோனியையே சேரும். அவரது தலைமையில் தான் இந்திய அணி 2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும், 2011ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையையும் மற்றும் 2013ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பதக்கத்தையும் இந்திய அணி வென்றது.
2004ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய இவருக்கு உலகளவில் பல லட்சம் ரசிகர்கள் இரு்ககின்றனர்.மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 16 ஆண்டுகள் இருந்த பெருமையும் இவரையே சாரும்.
கடந்த 2010ஆம் ஆண்டு சாக்ஷி என்பவருடன் காதல் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஸிவா எனும் மகளும் இருக்கின்றார்.
இந்த நிலையில் இன்று ஜூலை 7ஆம் திகதி தனது பிறந்தநாளை மனைவி மற்றும் பாலிவுட் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான சல்மானுடன் நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் பிரபலங்களின் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
This clip is going to break internet!
— ` (@WorshipDhoni) July 6, 2024
Salman Khan × MS Dhoni ❤#HappyBirthdayMSDhoni
pic.twitter.com/HMeFiymdUo
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |