போடு தகிட தகிட... வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை.. டிடிவி தினகரனின் அதிரடி அறிக்கை!
தமிழகத்தில், ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது.
ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில், ஒவ்வொரு கட்சியினரின் தேர்தல் அறிக்கையும் வெளியாகி கொண்டிருக்கும் நேரத்தில், அமமுக கட்சியின் தேர்தல் அறிக்கை டிடி வி தினகரன் வெளியிட்டுள்ளார். * வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
* விவசாயிகளுக்கு வீடு தேடி இடுப்பொருட்கள் மானியத்துடன் வழங்கப்படும்.
* மின்கட்டணம் மாதந்தோறும் செலுத்தும் முறை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை.
* விவசாயிகளுக்கு உரம் உள்ளிட்ட இடுபொருள்களை வீடு தேடி வழங்கும் திட்டம்.
* அரசு வேலைகளுக்கான வயது வரம்பு உயர்த்தப்படும்.
* காவல்துறையில் பெண் காவலர்களுக்கு தனி பிரிவு உருவாக்கப்படும். என உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.