Ethirneechal: பழைய நிலைக்கு திரும்புவாரா தர்ஷினி? போராடும் ஜீவானந்தம்
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினியை காப்பாற்றிய ஜீவானந்தம் அவர் பழைய மாதிரி வருவதற்கு முயற்சி செய்து வருகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.
நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.
ஜீவானந்தத்திடம் தர்ஷினி
தற்போதுள்ள கதைக்களத்தில் தர்ஷினி பெற்ற தந்தையால் கடத்தப்பட்டு சில ரவுடிகளால் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஜீவானந்தம் அவரை மீட்டுள்ளார்.
ஆனால் ஜீவானந்தம் தான் தர்ஷினியை கடத்திச் சென்றுள்ளார் என்று கூறப்பட்டு அவரை பொலிசார் சுட்டி பிடிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.
தர்ஷினிக்கு அளவிற்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததால், அவரது உடம்பு அளவில், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளாராம்.
இதனை மருத்துவர்கள் ஜீவானந்தத்திடம் கூறியுள்ளனர். இதனால் அவரை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு தர்ஷினியிடம் பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |