பிரபாகரன் வேடத்தில் நடித்த இலங்கை தமிழ் நடிகர் காலமானார்

Sri Lanka
By Fathima Oct 02, 2022 10:16 AM GMT
Report
Courtesy: BBC Tamil

இலங்கை சினிமாத்துறையில் குறிப்பிடத்தக்க தமிழ் நடிகரான தர்ஷன் தர்மராஜ் இன்று (02) காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக அவர் கொழும்பிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் எனத் தெரியவருகிறது.

திரைப்படங்களில் சிறப்பாக நடித்தமைக்காக பல்வேறு விருதுகளை வென்ற தர்ஷன், பலராலும் அவதானிக்கப்பட்ட 'பிரபாகரன்', 'சுனாமி' உட்பட 25க்கும் மேற்பட்ட சிங்கள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.

2008ஆம் ஆண்டு வெளியான 'பிரபாகரன்' எனும் இருமொழி (சிங்கம் மற்றும் தமிழ்) திரைப்படத்தில் - தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனாகப் பாத்திரமேற்று தர்ஷன் நடித்திருந்தார்.

இதனையடுத்து பிரபாகரன் திரைப்படமும், தர்ஷனும் சில தரப்பினரிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

அசோக ஹந்தகம இயக்கி 2012ஆம் ஆண்டு வெளியான 'இனி அவன்' (Ini Avan - Him, Here After) தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தமைக்காக தர்ஷனுக்கு சிறந்த நடிகருக்கான இரண்டு விருதுகள் கிடைத்திருந்தன. இந்தத் திரைப்படம் பிரான்ஸ் நாட்டின் 'கான்' திரைப்பட விழாவில் (FESTIVAL DE CANNES), 2012ஆம் ஆண்டு பிரன்ச் மொழி உப தலைப்புக்களுடன் திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ஏசியன் அமெரிகன் சர்வதேச திரைப்பட விழாவிலும் (Asian American International Film Festival) 'இனி அவன்' 2013ஆம் ஆண்டு திரையிடப்பட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இந்தத் திரைப்படத்தில் தர்ஷன் நடித்திருந்தார்.

பிரபாகரன் வேடத்தில் நடித்த இலங்கை தமிழ் நடிகர் காலமானார் | Dharshan Dharmaraj Dead

தொலைக்காட்சி நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு

இலங்கையின் மலையகப் பிரதேசமான ரக்வானையில் பிறந்த தர்ஷன் தர்மராஜ் - 2008ஆம் ஆண்டு ஏ9 (A9) எனும் சிங்களத் தொலைக்காட்சித் தொடர் நாடகத்தின் மூலமாக நடிப்புத் துறைக்குள் நுழைந்தார்.

மிக நீண்ட இடைவெளியின் பின்னர் இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படமான 'கோமாளி கிங்ஸ்'-இல், 'மோகன்' எனும் கதைப் பாத்திரத்தில் தர்ஷன் நடித்திருந்தார். 2018ஆம் ஆண்டு வெளியான 'கோ'மாளி கிங்ஸ்' முழு நீள நகைச்சுவைத் திரைப்படமாக அமைந்திருந்தது.

  இறுதியாக இவர் 'ரெல்ல வெரல்லட் ஆதரே' மற்றும் 'கொலம்ப' ஆகிய சிங்களத் தொலைக்காட்சித் தொடர் நாடகங்களில் நடித்து வந்தார்.

தர்ஷன் இறக்கும் போது அவருக்கு 41 வயது. அவரின் மனைவி சுபாஷினி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

பிரபாகரன் வேடத்தில் நடித்த இலங்கை தமிழ் நடிகர் காலமானார் | Dharshan Dharmaraj Dead

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US