மேடையில் தர்ஷாவின் ஆடை பற்றி பேசிய நடிகர்! மோசமான விமர்சனம் ஏன்? என்ன நடந்தது?
கடந்த சில நாட்களாக பொது மேடையில் நடிகை தர்ஷா குப்தா அணிந்து வந்த ஆடை குறித்து நகைச்சுவை நடிகர் சதிஷ் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஒடியோ வெளியீட்டு நிகழ்வில் அவர் அப்படி என்ன பேசினார், எதனால் சர்ச்சை எழுந்தது, அதற்கு அவர் அளித்த விளக்கம் குறித்து தெளிவாக பார்க்கலாம்.
சதிஷ் பேசியது என்ன?
சமீபத்தில் நடந்த Oh My Ghost ஒடியோ வெளியீட்டு விழாவில், அப்படத்தில் நடித்திருந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சன்னி லியோன், தர்ஷா குப்தா, நடிகர் சதிஷ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது மேடை ஏறிய சதிஷ், பாம்பேவில் இருந்து வந்த சன்னி லியோன் எப்படி வந்திருக்கிறார், கோயம்புத்தூரில் இருந்து வந்த பொண்ணு எப்படி டிரஸ் பண்ணியிருக்கு பாருங்க, சும்மா சொன்னேன் என கலாய்க்கும் தோணியில் பேசினார்.
Dharsha moonjiye maari pochu ?
— பூமர் (@poochaanD) November 7, 2022
Intha peruchaaliya Valikama kolunga frands ??? pic.twitter.com/YuhaudgSaP
இவரின் இந்த பேச்சுக்கு சமூகவலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தது.
மற்றவரின் ஆடை பற்றி பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? என பலரும் விமர்சிக்கத் தொடங்கினர்.
பாடகி சின்மயி, மூடர் கூடம் இயக்குனர் நவின், பாடகி ஸ்ரீனிவாஸ் என பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
விளக்கம் அளித்த சதிஷ்
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய சதிஷ், சோபாவில் அமர்ந்திருந்த போது இரு நண்பர்கள் ஏதேச்சையாக பேசிக்கொண்டிருந்ததை பொதுமேடையில் தர்ஷா சொன்னதால் அப்படி சொன்னதாகவும், உள்நோக்கத்துடன் எதையும் பேசவில்லை என விளக்கம் அளித்தார்.
தர்ஷா குப்தாவின் பதிலடி
இதற்கு தர்ஷாவோ, ஏன் பிரச்சனையை என் பக்கம் திருப்புகிறீர்கள், யாராவது தன்னை பற்றி அசிங்கமாக பேசுங்க என்று கூறுவார்களா? நீங்கள் கூறும் போதே எனக்கு கஷ்டமாக இருந்தது, ஆனால் அதை காட்டிக்கொள்ளவில்லை என தெரிவித்தார்.
சின்மயி என்ன சொன்னார்?
இதற்கு கமெண்டில் பதிவிட்டுள்ள சின்மயி, “அப்போ நீங்க சொல்லி அவர் சொல்லிவில்லையா? என்னிடம் அப்படித்தான் போனில் சொன்னார்” என தெரிவித்தார், இதற்கு “இல்லை“ என தர்ஷா பதிவிட, “நான் கூட விளையாட்டாக பேசியதை பெரிதுபடுத்தி விட்டேனோ என நினைத்தேன், அதை நீக்கி விடாதீர்கள், நீங்கள் பேசியதை நினைத்து பெருமையடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.
சைமா விருது விழாவில் நடிகர் சதிஷ்
இதற்கு முன்பும் சைமா விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளினியாக இருந்த நடிகையின் ஆடை குறித்து சதிஷ் பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.