வக்ர கதியில் திரும்பும் குரு... 5 ராசிகளுக்கு கிடைக்கும் நல்ல பலன் என்ன தெரியுமா?
கும்ப ராசிக்கு சென்ற குரு மீண்டும் வக்ர கதியில் தான் இருக்க வேண்டிய மகர ராசிக்கு செப்டம்பர் 14ம் தேதி மீண்டும் திரும்ப உள்ளார்.
குரு தற்போது வக்ர நிலை முடிந்து மீண்டும் மகர ராசிக்கு திரும்புவதால்
- ரிஷபம்
- கடகம்
- கன்னி
- தனுசு
- மீனம் ஆகிய ராசியினர் மிக சிறப்பான அற்புத பலனை குரு பகவான் மூலம் பெறுவார்கள்.
செப்டம்பர் 14ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை எப்படிப்பட்ட அற்புத பலன்களை மேலே குறிப்பிட்ட 5 ராசிகளுக்கு கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
செய்யும் தொழிலில் லாபம் இருக்கும். நீங்கள் பொறுமையுடன் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் அனைவரும் உங்களைப் புகழ்வார்கள்.
உத்தியோகத்தில் முன்னேற்றமும், லாபம் இருக்கும். உங்கள் துணையுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
ஆன்மீக செயல்பாடுகளில் பங்கேற்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு, இந்த நேரம் ஒரு வரப்பிரசாதம். எதிரிகளை வெல்லக்கூடிய வாய்ப்பு பெறுவீர்கள்.
வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். கடினமாக உழைப்பதன் மூலம், நீங்கள் நிச்சயமாக வேலையில் வெற்றி பெறுவீர்கள்.
குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். நிதி சிக்கல்களில் இருந்து விடுபடலாம். ஒரு புதிய வாகனம் அல்லது வீடு வாங்கலாம்.
உங்களின் மதிப்பு, மரியாதை மற்றும் கெளரவம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
குரு சாதகமற்ற சூழல் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்? ஜனன ஜாதகத்தில் குரு பகவான் பலவீனமானால், ஞாபகமறதி, காதுகளில் பாதிப்பு, குடல் புண், பூச்சிகளால் பாதிப்பு, பெரியோர்களின் சாபம், கோவில் பிரச்சினையில் ஈடுபடுவது, வறுமை போன்றவற்றால் உடல்நிலை பாதிப்பு உண்டாகும்.
செப்டம்பர் 14ம் தேதி வரை விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகள் மிக சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். அதன் பின்னர் நவம்பர் 14ம் தேதி வரை சற்று கவனமாக இருப்பது அவசியம்.