ரஜினியின் மருமகன் தனுஷின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியில் திளைத்துள்ளனர்.
நடிகர் தனுஷ்
கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை கலக்கி வருகிறார் நடிகர் தனுஷ். தொடர்ந்து, நானே வருவேன், D 43 ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். நாளை (ஆக.18) இவர் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
7 முதல் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த நடிகர் தனுஷ் தற்போது 20 ,முதல் 25 கோடி வரை சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டோலிவுட்டில் வாத்தி படத்தில் நடித்து வரும் தனுஷ்,
சம்பளம்
மீண்டுமொரு டோலிவுட் இயக்குநரான சேகர் கம்முலா படத்தில் நடிக்க அவருக்கு 50 கோடி வரை சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.
ரூ.3.40 கோடி மதிப்பிலான பென்ட்லி கான்டினென்டல் ஜிடி கார் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் ப்ரீமியம் பிளாக் கார் என இரு சொகுசு கார்களை வைத்திருக்கிறார் நடிகர் தனுஷ்.
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் விலை சுமார் 7 முதல் 8 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தனுஷின் சொத்துமதிப்பு பற்றிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
சொத்துமதிப்பு
இது அதிகாரபூர்வமாக கூறப்படவில்லை என்றாலும் கோலிவுட் வட்டாரத்தில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு சுமார் 200 கோடியை தாண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமில்லாது போயஸ் கார்டனில் 150 கோடி செலவில் புதிய வீட்டை கட்டி வருகிறார் தனுஷ் என்ற தகவலும் கசிந்துள்ளது.