தனது மகன் அம்மா மாதிரி! ஐஸ்வர்யாவை யாரும் ஏமாற்றவே முடியாது: மனைவி பற்றி தனுஷ்
நடிகர் தனுஷ் தனது மகன் இருவரை பற்றியும், ஐஸ்வர்யாவை யாரும் ஏமாற்ற முடியாது என்று பட ப்ரொமோஷன் ஒன்றில் பேசியுள்ளார்.
நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் இருவரும் பிரிந்துவிடுவதாக பதிவு ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
இவர்களின் பிரிவிற்கு சரியான காரணம் எதுவும் தெரியாத நிலையில், இவர்கள் மீண்டும் சேர்ந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மகன்கள் அம்மா மற்றும் அப்பா இருவரிடமும் மாறி மாறி இருந்து வருகின்றனர். தனுஷும் பொதுநிகழ்ச்சிகளுக்கு தனது மகன்களை அழைத்துச் செல்கின்றார். இதன் புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது.
ஐஸ்வர்யா மாதிரி மகன்
இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ஹாலிவுட் படமான தி க்ரே மேன் அண்மையில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. படத்துக்கான ப்ரோமோஷனில் பேசியிருந்த தனுஷ். தன் மகன்கள் யாத்ரா லிங்கா பற்றி சில சுவாரஸ்ய தகவலகளைப் பகிர்ந்திருந்தார்.
அதில்,’யாத்ரா என்னை மாதிரி.அமைதியானவர். நாம ஏதும் சொன்னா அதைப் பற்றி யோசிப்பார். சாப்பாட்டில் மட்டும் அவரும் நானும் வெஜிடேரியன். ஆனால் லிங்கா அவங்க அம்மா மாதிரி, படு உஷார். ஏமாற்றவே முடியாது. கதை சொல்லித் தூங்க வைச்சிடலாம்னு நினைச்சா நீங்கதான் ஏமாந்து போவீங்க. அவங்க அம்மா எப்பவுமோ எதுலையுமே ஷார்ப். படிச்சவங்க இல்லையா!. அப்படித்தான் இருப்பாங்க.’ என்கிறார்.
தனுஷை இடைமறித்த நிகழ்வின் ஆங்கர், அப்போ ஐஸ்வர்யாவை ஏமாற்றமுடியாதுனு சொல்லறிங்க... அப்படித்தானே? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு “அட நல்லவிதமாத்தாங்க சொல்லறேன்” என நகைச்சுவையுடன் பதிலளிக்கிறார் தனுஷ்.

