பள்ளி நண்பர்களுடன் நடிகர் தனுஷ்... வைரலாகும் புகைப்படம்
நடிகர் தனுஷ் தனது பள்ளி நண்பர்களுடன் ரீயூனியனில் கலந்து கொண்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் தனுஷ், துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.
ஆரம்பத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்த இவர், பின்பு கடின உழைப்பு காரணமாக பிஸியான நடிகராக வலம்வருகின்றார்.
இவர் தற்போது நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் 15ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், தனுஷ் டி50 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு ராயன் என்று பெயரிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கால்ஷீட் கொடுக்க முடியாமல் பிஸியாக இருக்கும் நிலையில், தனது பள்ளி நண்பர்களை சந்தித்துள்ளார்.
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களை அழைத்து ரியூனியன் ஒன்றை நடத்தி இருக்கிறார் தனுஷ்.
அந்த ரீயூனியனில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |