மாமனாருடன் தனுஷ் வெளியிட்ட புகைப்படம்: புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
தேசிய விருதினை பெற்ற நடிகர் ரஜினிகாந்த் உடன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற தனுஷ் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் கலைஞர்கள் மத்திய அரசால் வழக்கும் விருதே தாதா சாகேப் பால்கே விருது ஆகும்.
இந்நிலையில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் ரஜினியின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அசுரன் படத்தில் சிறந்த நடிகருக்கான விருது தனுஷிற்கும், துணை நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனுஷ், தனது மாமனார் ரஜினியுடன் விருதுடன் இருக்கும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தாதா சாகேப் பால்கே விருதை என் தலைவர் வென்ற அதே மேடையில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றது விவரிக்க முடியாதது என்றும் அனைவருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.