பிரபல தனுஷ் பட இயக்குநர் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம்!
பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி 58 வயதில் இன்று உடல் நலக்குறைவால் காலமாகியுள்ள நிலையில், திரையுலகினர் பெரும் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.
இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி
பிரபல இயக்குனரான எஸ் எஸ் ஸ்டான்லி ஸ்ரீகாந்த் நடித்த ஏப்ரல் மாதத்தில், தனுஷ் நடித்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன், மெர்க்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குனராக மட்டுமின்றி நடிப்பிலும் அசத்தி வந்துள்ளார். ராவணன், ஆண்டவன் கட்டளை, சர்கார், பொம்மை நாயகி, கடைசியாக மகாராஜா படத்திலும் நடித்துள்ளார்.
சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ் எஸ் ஸ்டான்லி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார்.
இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது இறுதி சடங்கு இன்று மாலை வளசரவாக்கம் மின் மயானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |