இப்போ என்ன செய்வீங்க மாமி? மாமியாரின் திட்டத்தை தவிடுபொடியாக்கிய தனுஷ்
பிரபல நடிகர் தனுஷ்ம், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்து விட்டார்கள் என்பது ஊரறிந்த செய்தியே, இருவரையும் சேர்த்து வைக்க எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் பலனில்லாமல் போய்விட்டது.
எனவே தன் செல்ல மகள் ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷுக்கு பாடம் கற்பிக்க விரும்புகிறாராம் லதா.
இதற்காக தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை அணுகி தனுஷை வைத்து படம் பண்ண வேண்டாம் என்று கோரிக்கை விடுத்திருக்கிறாராம்.
எப்படியும் தனுஷை பழிவாங்கிவிடலாம் என திட்டம் வைத்திருந்த லதாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு தனுஷ்க்கு கிடைத்திருக்கிறது, நகைச்சுவை படத்தை எடுத்து ஹிட்டாக்குவதில் வல்லவர் சுந்தர் சி.

தனுஷ்ம் அசத்திவிடுவார் என்பதால் நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும் என்பதே பலரது கருத்து.
இந்நிலையில் லதா ரஜினிகாந்தின் திட்டம் தவிடுபொடியாகிவிட்டதாக திரைத்துறையில் பேசப்படுகின்றது.
தனுஷ் ஒரு நல்ல நடிகர். அதனால் இயக்குநர்கள் அவரை ஒதுக்கி வைக்க மாட்டார்கள் என்று பேசப்படுகிறது.
இதுதவிர கொரடலா சிவா இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் பான் இந்தியா படத்திலும், இரண்டு பாலிவுட் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் தனுஷ்.

கை நிறைய படங்கள் இருந்தாலும், தானும் இயக்குனராக அவதாரம் எடுக்க முடிவெடுத்துள்ளாராம் தனுஷ்.
இதை எல்லாம் பார்த்தவர்கள், தனுஷின் கெரியரை லதாவால் நாசமாக்க முடியாது என்கிறார்கள்.
தனுஷ் என்னை காதலித்தார்! பிரபல நடிகை சொன்ன தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி