நடுக்கடலில் மகன்களுடன் தனுஷ்: சிறுவர்களாக இருந்தவங்க எப்படி ஸ்டைலா மாறிட்டாங்கனு பாருங்க
நடிகர் தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் நடுக்கடலில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு தந்தையர் தினத்தினைக் கொண்டாடியுள்ளார்.
தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் நெட்ப்ளிக்ஸில் வெளியான ஜகமே தந்திரம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
குறித்த திரைப்படத்தில் மதுரையில் சிறிய அளவில் ரவுடித்தனம் செய்யும் தனுஷ் லண்டனில் இரு Gangster கும்பலுக்கு இடையிலான பனிப்போரில் சிக்கிக்கொள்ளும் கதையே இதுவாகும்.
இந்நிலையில் இன்று அப்பாக்கள் தினம் என்பதால் தனது இரண்டு மகன்களுடன் கடலுக்கு நடுவே எடுத்துள்ள புகைப்படத்தினை தனுஷ் வெளியிட்டுள்ளார்.
குறித்த புகைப்படத்தில் தனுஷின் மகன்கள் இருவரும் அட்டகாசமாக வளர்ந்ததுடன், இருவருமே அப்பா, அம்மா சாயலில் அச்சு அசலாக காணப்படுகின்றனர். இதனை அவதானித்த நெட்டிசன்கள் புகழ்ந்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.