கலையரசா நீ பிள்ளை மனைவியோடு சேர்ந்து வாழு! தனுஷின் விவாகரத்துக்கு பெற்றோர்கள் வைத்த கோரிக்கை!
நடிகர் தனுஷின் பெற்றோர் என நீதிமன்றத்தை நாடிய கதிரேசன் தம்பதியினர்கள் மகனையும், மகளையும் சேர்த்து வைக்ககோரி ரஜினிகாந்திற்கு எழுதிய கடிதம் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து சம்பவம் தற்போது டிரெண்டிங்காக பேசப்பட்டு வருகிறது. விவாகரத்து சம்பவத்துக்கு பல காரணங்கள் இணையத்தில் உலா வரும் நிலையில், நடிகர் தனுஷ் தனது மகன் எனக்கோரி நீதிமன்றத்தை நாடியுள்ள சர்ச்சை தம்பதியினர்கள் தற்போது வைத்த கோரிக்கை தான் செம்ம ஹைலைட்.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன் மற்றும் மீனாட்சி என்ற தம்பதிகளுக்கு மூத்த மகன் கலையரசன் 11-ம் வகுப்பு படிக்குபோதே காணாமல் போயுள்ளார். இதனிடையில், சினிமாவில் தனுஷ் நடித்த படத்தை பார்த்துவிட்டு தனது மகன் கலையரசன் தான் தனுஷ் எனவும் அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர்கள் பிரிய போவதாக வெளியான செய்தியைக்கேட்டு இந்த தம்பதியினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் எனவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினரை சேர்த்து வைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைப்பற்றி, மீனாட்சி அம்மாள் தெரிவிக்கையில், “நாங்கள் வயதான காலத்தில் நாங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம். கலையரசா நீ உனது பிள்ளைகள், மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.