இவர் இல்லனா எங்கே போயிருப்பாரோ! தனுஷின் சினிமா வாழ்க்கையை புரட்டிபோட்ட இயக்குநர்..
தமிழ் சினிமாவில் யாருக்கும் கிடைக்காத அளவிற்கு வாய்ப்பை பயன்படுத்தி இருக்கிறார் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் இவரெல்லாம் நடிகரா என்று கேலி செய்யும் அளவிற்கு அசிங்கப்பட்டேன் என்று அவரே கூறியிருந்தார். அதையெல்லாம் தூக்கி போட்டு கடுமையாக உழைத்து தற்போது பாலிவுட், ஹாலிவுட் என தனது புது பரிமானத்தை எடுத்து வருகிறார்.
இதற்கு முக்கிய காரணம் இவர் தான் என்று பிரபல இயக்குநர் வெற்றி மாறனை கூறி வருகிறார்கள் சினிமா வட்டாரங்கள். தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி அமைந்த பிறகு இவரது திறமையும் புகழும் எங்கேயோ போய்விட்டது என்று தான் கூற வேண்டும். வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்திற்காக கிட்டத்தட்ட 6 தேசிய விருதுகள் கிடைத்தன.
அதில் தனுசுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.
அதன் பிறகு தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்த பொல்லாதவன், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.
இத்தனை ஹிட் படங்கள் கொடுத்த தனுஷ் படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களுக்கு பெரிய அளவில் மரியாதை கொடுக்க மாட்டார் என பல நடிகர்கள் பல மீடியாவில் கருத்து பதிவு செய்து வந்துள்ளனர்.