ரகசிய திருமணம் செய்தார்களா? தனுஷ் மற்றும் மிருணாள் தாக்கூர் - வைரல் வீடியோ
தனுஷ் மற்றும் மிருணாள் தாக்கூரின் திருமண வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த காணொளியின் பின்னணியை பதிவில் பார்க்கலாம்.
வைரல் காணொளி
தற்போது நடிகர் தனுஷ் மற்றும் மிருணாள் தாக்கூர் இருவரும் காதலித்து வருவதாகவும் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மததியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த விடயம் தொடர்பாக தனுஷ் மற்றும் மிருணாள் தாக்கூர் இருவரிடமிருந்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இது மேலும் இந்த செய்தி எண்மையாக இருக்குமோ என வலுவாக நம்ப செய்தது.
இந்த நிலையில் இது ஒரு பக்கம் இருக்க தற்போது தனுஷ் மற்றும் மிருணாள் தாக்கூருக்கு பாரம்பரிய முறையில் திருமணம் நடைபெறுவது போல வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோ பற்றி இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திருமண காணொளி
டிஜிட்டல் யுகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உலகில், யதார்த்தத்திற்கும் மாயைக்கும் இடையிலான கோடு என்று சொல்லலாம். இவற்றால் பெரும்பாலும் தவறான தகவல்களையும், பெரிய அளவிலான ஊகங்களையும் பரப்பக்கூடும்.
அப்படி தான் தற்போது நடிகர் மிருணால் தாக்கூர் மற்றும் தனுஷ் ஆகியோருக்கும் ஒரு AI காட்சி வெளியாகி உள்ளது. இந்த திருமண வீடியோ AI என கண்டறிய மிகவும் காரணத்தால் பலரும் உண்மை என நம்புகின்றனர்.
இது ரசிகர்களை அதிர்ச்சியிலும், குழப்பத்திலும், உற்சாகத்திலும் ஆழ்த்தியது. ஆனால் தற்போது ஒரு தெளிவு கிடைத்துள்ளது. தனுஷ் மற்றும் மிருணாள் தாக்கூர் திருமணம் செய்யவில்லை. இது முழுக்க முழுக்க ai வீடியோ என்பது தெளிவாகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |