தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி மீண்டும் ஒன்று சேர்கிறார்களா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடிகள் தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தற்போது மகன்களுக்காக சேர்ந்து வாழ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி
ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த நிலையில், யாத்ரா லிங்கா என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு தனுஷை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவிப்பு செய்திருந்தார்.
தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் தங்களது முடிவில் உறுதியாக உள்ள நிலையில், குழந்தைகள் விடயத்திலும், பொது நிகழ்ச்சியிலும் கவனம் செலுத்துகின்றனர்.
ஐஸ்வர்யா விவாகரத்து முடிவுக்கு பின்னர் மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். இதே போன்று தனுஷும் தனது பயணத்தை தொடர்ந்துள்ள நிலையில், பல படங்களில் நடித்தும் வருகின்றார்.
தனுஷ் எங்கு சென்றாலும் தனது மகன்களை அழைத்துச் செல்வதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
மீண்டும் இணைகிறார்களா?
சமீபத்தில் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படம் வெற்றியடைய தனுஷ் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும். பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்காக இப்படியொரு முடிவை இருவரும் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஆனால், இதுகுறித்து எந்த ஒரு தகவலும் தனுஷ் - ஐஸ்வர்யா தரப்பில் இருந்து வெளிவரவில்லை. பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தான் இது குறித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |