தந்தேராஸ் நாளில் உருவாகும் இரட்டை ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது!
Dhanteras Horoscope 2026 : தீபாவளி பண்டிகையின் முன் கொண்டாடப்படுவது தந்தேராஸ். அட்சய திருதியைப் போலவே மங்களகரமான இந்த நாள், இந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.
ஜோதிட ரீதியாகவும் இந்த ஆண்டு தந்தேராஸ் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. ஏனெனில், இந்நாளில் இரண்டு மங்களகரமான பஞ்சமகா புருஷ ராஜயோகங்கள் உருவாகியுள்ளன.

அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் மற்றும் செழிப்பின் காரணியாகக் கருதப்படும் சுக்கிரன், தனது சொந்த ராசியான துலாம் ராசியில் இருப்பதால் மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ளது.அதேபோல், துலாம் ராசியில் சுக்கிரனுடன் புதன் இணைந்திருப்பதால் லட்சுமி நாராயண ராஜயோகமும் ஏற்பட்டுள்ளது.
செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவிக்கு உகந்த வெள்ளிக்கிழமையில் தந்தேராஸ் வந்திருப்பதுடன், இரண்டு அரிய ராஜயோகங்களும் இணைந்திருப்பதால் சில ராசிக்காரர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்ததாக அமையப் போகிறது.
அப்படி, இந்த இரட்டை ராஜயோகங்களால் தொழில், நிதி நிலை, தனிப்பட்ட வாழ்க்கை என பல்வேறு வழிகளிலும் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

தந்தேராஸ் நாளில் உருவாகும் இரண்டு ராஜயோகங்களின் சாதகமான பலன்களால் ரிஷப ராசிக்காரர்களின் நீண்டகால பணப் பிரச்சனைகள் படிப்படியாக முடிவுக்கு வரும்.
வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக, பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத போனஸ் அல்லது கூடுதல் வருமானம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைப்பதுடன், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இரட்டிப்பு லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் அமையும். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களிலும் எதிர்பார்த்த நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
கன்னி

தந்தேராஸ் நாளில் உருவாகும் இரண்டு ராஜயோகங்களால் கன்னி ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சாதகமான சூழல் உருவாகக்கூடும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த நிலுவைப் பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது.
இதனால் பொருளாதார நெருக்கடிகள் குறைந்து, நிம்மதி ஏற்படலாம். அதேசமயம், புதிய வருமான ஆதாரங்கள் உருவாகுவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.
வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் தேடி வரலாம். வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன், தொழிலில் முன்னேற்றம் காண்பதற்கான சூழலும் அமையும்.
துலாம்

தந்தேராஸ் நாளில் உருவாகும் இரண்டு ராஜயோகங்களின் தாக்கத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு பல்வேறு வழிகளில் இருந்து பணவரவு கிடைக்கும்.
பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதுடன், வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வாய்ப்புகளும் தேடி வரும்.பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம் அல்லது புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம்.
சிலருக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இடமாற்றம் கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது.பணப் பரிவர்த்தனைகள் மற்றும் தொழில் சார்ந்த நடவடிக்கைகள் மூலம் நல்ல லாபத்தைப் பெறலாம்.
மகரம்

தந்தேராஸ் நாளில் உருவாகும் இரண்டு ராஜயோகங்களால் மகர ராசிக்காரர்களின் பொறுமைக்கும் கடின உழைப்பிற்கும் உரிய பலன் கிடைக்கக்கூடும்.
குறிப்பாக, வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். வருமானம் அதிகரிப்பதுடன், எதிர்பாராத வகையில் சில நல்ல செய்திகளையும் கேட்க நேரிடலாம்.
வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு தொழிலை விரிவுபடுத்துவதற்கும், அதன் மூலம் வருமானத்தைப் பெருக்குவதற்கும் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.
மேலும், திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், கணவன் - மனைவிக்கு இடையிலான அன்பும் நெருக்கமும் அதிகரிக்கக்கூடும்.
கும்பம்

தந்தேராஸ் நாளில் உருவாகும் இரண்டு ராஜயோகங்களின் சாதகமான பலன்களால் கும்ப ராசிக்காரர்களுக்கு பல்வேறு நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
குறிப்பாக, சுக்கிர பகவானின் அருளால் பணம் சம்பாதிப்பதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். எதிர்பார்த்ததைவிட அதிக வருமானம் கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு கிடைக்கும் பணத்தைத் திட்டமிட்டு, சரியான வழிகளில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைப் பெற முடியும். ஒட்டுமொத்தமாகப் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான சாதகமான காலமாக இது அமையும்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |