பிக்பாஸில் கதறி துடிதுடித்த தனலட்சுமி! ஒட்டுமொத்த போட்டியாளர்களும் சோகத்தில் ஆழ்ந்த தருணம்
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் தனலட்சுமி கதறியழுத தனது திறமையினை வெளிக்காட்டியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக்பாஸில் புதிய டாஸ்க்
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் மக்களுக்கு பிடித்த பிரபலங்களாக மாறி அசத்திவரும் நிலையில், இன்று புதிய அறிவிப்பு ஒன்று பிக்பாஸால் கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது தற்போது மக்களுக்கு பிடித்த பிரபலங்களாக நடித்து வரும் போட்டியாளர்களில், நன்றாக நடித்து காட்டுபவர்களை தெரிவு செய்து பிரம்மாண்ட கலைநிகழ்ச்சியில் பங்கு பெற வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது தனலட்சுமிக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு என்னவெனில், சீட்டு கம்பெனியில் பணத்தை போட்டு மோசம் போனதால், மகளின் திருமணத்தினை நடத்த சிரமம் ஏற்பட்டுள்ளது... இதனை தத்ரூபமாக நடித்து தனலட்சுமி அசத்தியுள்ள நிலையில், ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.