வறட்டு இருமலால் அவஸ்தையா? Dextromethorphan Hydrobromide பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
வறட்டு இருமலை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது Dextromethorphan Hydrobromide.
மூளையில் உண்டாக்கும் இருமல் யைமத்தின் நடவடிக்கையைக் குறைப்பதன் மூலம் இது செயல்படுகிறது.
பக்கவிளைவுகள்
- தூக்ககலக்கம்
- மயக்கம்
- மனச்சோர்வு
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆபத்தான ஒன்றே.
வறட்டு இருமல் சரியாகும் வரை Dextromethorphan Hydrobromide மருந்துகளை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
சரியான அளவுகளில் மட்டுமே மருந்துகளை எடுத்துக்கொள்ளவும், குறைவாகவோ, அதிகமாகவோ எடுத்துக்கொள்ள வேண்டாம்.
Dextromethorphan Hydrobromide மருந்துகளை உட்கொள்ளும் போது அதிகளவிலான நீர் ஆராகாரங்களை பருகவும், இது சளிளை இளகுபடுத்தி கொடுக்கவும், சளி வெளியேறவும் உதவி செய்கிறது.
7 நாட்களுக்கு மேலும் வறட்டு இருமல் இருந்தால் மருத்துவரை உடனடியாக தொடர்பு கொள்ளவும்.
பெரும்பாலான நோயாளிகளுக்கு வறட்டு இருமலை குணப்படுத்த Dextromethorphan Hydrobromide பரிந்துரைக்கப்படும், சரியான அளவில் எடுத்துக்கொண்டால் தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.
எனினும் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டாம், மருந்தை எடுத்துக்கொண்ட பின்னர் தூக்க கலக்கம் இருக்கலாம், ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது.
உயர் ரத்த அழுத்தம் இருக்கும் நபர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தவும், இது ரத்த அழுத்தத்திற்காக பயன்படுத்தப்படும் மருந்துகளின் தீவிரத்தை குறைக்கலாம்.