ரத்தசோகையை குணப்படுத்தும் Dexorange Syrup பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
போலிக் ஆசிட், வைட்டமின் பி12 மற்றும் இரும்பு சத்து குறைபாடால் உண்டாகும் ரத்தசோகையை சரிசெய்ய Dexorange Syrup பயன்படுத்தப்படுகிறது.
உடல் பலவீனம் மற்றும் நோய்தொற்றுக்கு ஆளான நிலையில் மீட்டெடுக்க பயன்படுத்தப்படுகிறது.
இதுதவிர பசியின்மையை சரிசெய்யவும், இரும்பு சத்தை உடல் கிரகித்துக்கொள்ளும் உதவுகிறது.
அறுவைசிகிச்சை மேற்கொண்ட பின்னர் உடல் பழைய நிலைக்கு மீண்டு வர Dexorange Syrupயை உபயோகப்படுத்தலாம்.
கர்ப்பம் தரித்திருக்கும் போதும், தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கும் ரத்த சோகை ஏற்படாமல் தடுக்க உபயோகமாக இருக்கும்.
இதற்கு முன்பு மருந்துகள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும் நபராக இருப்பின் மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும்.
Dexorange Syrupல் உள்ள மூலப்பொருட்களில் உங்களுக்கு ஏதும் அலர்ஜி இருந்தாலும் மருத்துவரிடம் தெரியப்படுத்தவும்.
அறுவைசிகிச்சை செய்துகொள்ளப்போகும் நபராக இருப்பின் 2 அல்லது 3 வாரங்களுக்கு முன்கூட்டியே Dexorange Syrupயை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்.
மருத்துவர் பரிந்துரைத்த அளவுகளில் மட்டுமே எடுத்துக்கொள்ளவும், அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எடுக்க வேண்டாம்.
டீ அல்லது காபியுடன் சேர்த்து Dexorange Syrupயை குடிக்க வேண்டாம்.
சூரிய வெளிச்சம் நேரடியாக படாதவண்ணம் அறைவெப்பநிலையில் வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு- மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆபத்தான ஒன்றே!!!