ரத்த சோகையினை அடியோடு விரட்ட வேண்டுமா? இந்த ஒரே ஒரு பானம் போதும்
இரத்த சோகை என்பது உங்கள் இரத்தத்தில் போதுமான சிவப்பு இரத்த அணுக்கள் இல்லாத ஒரு நிலை ஆகும். இது உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதை இரத்தம் கட்டுப்படுத்துகிறது.
உங்களுக்கு இரத்த சோகை இருந்தால், நீங்கள் எப்போதும் சோர்வாக உணருவீர்கள். சில சமயங்களில் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, மூச்சுத் திணறல், தலைசுற்றல், நெஞ்சு வலி மற்றும் குளிர்ந்த நிலையில் கைகள் மற்றும் கால்களையும் நீங்கள் உணரலாம். தோல் வெளிர் மற்றும் மஞ்சள் நிறமாகவும் தோன்றலாம்.
இரத்த சோகையை குணமாக்கும் ஜுஸை தற்போது எவ்வாறு தயார் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் - 4
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புதினா - ஒரு கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
தேன் - 2 தேக்கரண்டி
செய்முறை
நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி விட்டு கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லியுடன் சேர்த்து சிறிது நீர்விட்டு அரைத்துக் கொள்ளவும்.
தேவையான அளவு நீர் சேர்த்து வடிகட்டிக் கொள்ளவும். அத்துடன் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து பரிமாறவும்.
இந்த நெல்லிக்காய் சாறு உடனடி புத்துணர்ச்சி அளிப்பதுடன் ரத்த சோகையையும் படிப்படியாக சரி செய்யும்.