ஆட்டோ இம்யூன் நோய்க்கு மருந்தாகும் Dexamethasone மாத்திரைகள்
ஆட்டோ இம்யூன் கோளாறுகளால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு மருந்தாகிறது Dexamethasone.
ஸ்டிராய்டாக செயல்படும் Dexamethasone, ஆட்டோ இம்யூன் நோயை உண்டாக்கும் கெமிக்கல் மெசேஞ்சர்களை தடுப்பதால் தீர்வளிக்கிறது.
நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலமே தவறாக நம் உடலை தாக்குவதையே ஆட்டோ இம்யூன் கோளாறு என்று அழைக்கிறோம்.
நோய் எதிர்ப்பு மண்டலத்தில் உள்ள ஆன்டிபாடிகள், வெள்ளை அணுக்களை கிருமிகள் என நினைத்து தாக்குவதால் இது ஏற்படுகிறது.
இதன்போது
முடி உதிர்தல், எடை இழப்பு, காய்ச்சல், உடல் பலவீனம், மலத்தில் ரத்தம் சளி வெளியேறுவது, வயிற்று வலி, மயக்கம், அதிக களைப்பு, பார்வை மங்கலாதல், குமட்டல், சரும வறட்சி போன்ற பல அறிகுறிகள் உண்டாகும்.
இதற்கு மருந்தாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மாத்திரையே Dexamethasone.
எந்தவொரு மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக எடுத்துக்கொள்வது ஆபத்தை உண்டு பண்ணலாம்.
இதேபோன்று Dexamethasone மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின் படி எடுக்கவும்.
நீண்ட நாட்களுக்கு அல்லது தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டாம், மாத்திரைகள் பயன்படுத்தும் காலகட்டத்தில் காய்ச்சல், தொண்டை வறட்சி போன்ற பக்கவிளைவுகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்.
இது ஒரு ஸ்டிராய்டு, தோல் சிவத்தல், உடற்சூடு, வீக்கம் போன்ற நோய்த்தொற்றுகளை சரிசெய்கிறது.
இதுதவிர anaphylaxis, asthma, rheumatoid arthritis போன்றவற்றிற்கும் மருந்தாகிறது, மற்ற புற்றுநோய் மருந்துகளுடன் சேர்த்தும் பயன்படுத்தப்படுகிறது.
நோயின் தீவிரத்தை பொறுத்து நேரடியாக உடலுக்குள் செலுத்தவும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.