பகவான் கிருஷ்ணரின் சிலையில் கேட்ட இதயத்துடிப்பு: ஷாக்கிங் வீடியோ
கோவிலில் பகவான் கிருஷ்ணரின் சிலையின் இதயத்துடிப்பை மருத்துவர் ஒருவர் பரிசோதிப்பது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
இணையத்தை பல வகையான வீடியோக்கள் ஆக்கிரமித்து உள்ளது, சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதாவது கோவில் ஒன்றில் மருத்துவர் ஒருவர் கிருஷ்ணர் சிலைக்கு ஸ்டெதஸ்கோப் மூலம் நாடித்துடிப்பை கேட்கிறார்.
சமூகவலைத்தளங்களில் புயலாய் பரவி வரும் வீடியோவை பார்த்து பலரும் அதிர்ச்சியில் உறைய, பலரோ வேடிக்கையானது என கமெண்ட் செய்து வருகின்றனர்.
மதசடங்கு நிகழ்ந்து கொண்டிருந்த போது இதயத்துடிப்பை கேட்டதாக பக்தர் ஒருவர் கூற, உடனடியாக மருத்துவரை அழைத்துள்ளனர்.
அவரும் ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக் கொண்டு சிலையில் துடிப்பை பரிசோதிக்கிறார்.
தொடர்ந்து மற்றொரு நபரும் துடிப்பை கேட்கிறார், அங்கு கூடியிருந்த பக்தர்கள் குழுவாக பிரார்த்தனை செய்கின்றனர், அருகில் சங்கு சத்தம் ஒன்றும் கேட்கிறது.
இந்த வீடியோ வைரலாக, ”பின்னணியில் டிரம்ஸின் இசை கேட்கிறது”, ”மருத்துவர் பக்தரையும் பரிசோதித்திருப்பார்” , ”இப்படித்தான் சீனாவை முந்திச் செல்கிறோம்” என்பது போன்ற கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |