பிசாசு குகை பற்றி கேள்விப்பட்டதுண்டா? முழு நதியின் நீரையும் உறிஞ்சிவிடுமாம்
உலகில் மர்மங்களுக்கு என்றுமே பஞ்சமில்லை. அந்த வகையில் நதி ஓடுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், முழு நதியையும் உறிஞ்சும் குகை பற்றி தெரியுமா?
அமெரிக்காவின் மின்னசோட்டாவிலுள்ள நீதிபதி சி.ஆர் மேக்னி ஸ்டேட் பூங்காவில் இந்தக் குகை அமைந்துள்ளது.
இதை டெவில்ஸ் கெட்டில் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். உள்ளூர் மக்கள் இதற்கு பிசாசு குகை என்று பெயரிட்டுள்ளனர்.
அதாவது, இந்த ஆற்றிலிருந்து விழும் தண்ணீர் ஒரு சிறிய பள்ளத்தில் முழுவதுமாக உறிஞ்சப்படுகிறது. இந்த துவாரம் குகையைப் போல் உள்ளது.
image - cbs news
ப்ரூல் நதியின் நீர் ஒரு முறுக்கான குறுகிய பாறைப் பாதையின் கீழே விழுவதாகக் கூறப்படுகிறது. பின்னு அது முழுவதுமான இந்தக் குகையில் உறிஞ்சப்படுகிறது.
இந்த டெவில்ஸ் கெட்டில் குகையானது, இன்று வரையில் விஞ்ஞானிகளுக்கு ஒரு மர்மமாகவே காணப்படுகிறது.
அனைத்தையும் விட முழு நதியின் நீரும் எவ்வாறு குகைக்குள் இருக்கும்? ஆற்றின் நீர் எங்கே செல்கிறது? என்ற கேள்விக்கான பதில் இன்று வரையில் கிடைக்கவில்லை.
image - amusing planet
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள், அவர்களைச் சுற்றி நடக்கும் அனைத்து விடயங்களையும் கடவுளுடன் அல்லது பிசாசுடன் தொடர்பு படுத்திவிடுவார்கள்.
எனவே நதி முழுவதுமாக உறிஞ்சப்பட்டும் இந்தக் குகை நிரம்புவதில்லை என்று நம்பப்படுகிறது. அதன் காரணமாகவே இதை டெவில்ஸ் கெட்டில் என்று அழைக்கிறார்கள்.