நடிகை தேவையாணியின் பேவரைட் டிஷ் - வெறும் 2 நிமிடத்தில் செய்து அசத்தலாம்!
சூர்ய வம்சம் திரைப்படத்தில் நடிகை தேவயானி செய்து அசத்திய இட்லி உப்புமாவின் ரகசியத்தை அண்மையில் தெரிவித்துள்ளார்.
90ஸ் கிட்ஸ் காலகட்டத்தில் சரத்குமார் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த சூர்ய வம்சம்.
இந்த படத்தில், நாயகி தேவயானி காதல் திருமணம் செய்து கொண்டு வறுமையில் வாழ்கை நடத்தும் நேரத்தில், வீட்டிற்கு வரும் தனது தந்தைக்கு இட்லி உப்புமா செய்து பரிமாறுவார்.
அதை சாப்பிட்டு அவர் வெகுவாக பாராட்டுவார். இந்த படத்திற்கு பின் இட்லி உப்புமா ஃ பேமஸ் ஆனது.
இது குறித்து, தேவயானி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ''இட்லி உப்புமா இயக்குநர் விக்ரமனோட எண்ணம் தான்.
அவரோட கான்செப்ட் தான். என்னுடைய கணவருக்கும் குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும்.
எனக்கே ரொம்ப பேவரைட் டிஷ் தான் என்றார்.
உங்களுக்கும் பேவரைட்டா? நீங்களும் செய்து அசத்துங்கள்
தேவையான பொருட்கள்
- இட்லி – 10
- வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 2
- கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய் – தாளிக்க
- மஞ்சள் பொடி – அரை சிட்டிகை
- உப்பு – சிறிதளவு
செய்யும் முறை
இட்லியை ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் போட்டு எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதனால் இட்லி மிருதுவாக இருக்கும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
பச்சை மிளகாயை கீறி விடுங்கள். வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
உதிர்த்த இட்லியை போட்டு, சிறிது உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் பிரட்டுங்கள்.
சுவையான இட்லி உப்புமா தயார்.