சரிகமப நிகழ்ச்சியால் உடைந்து போன சபேசன்... தேவயானி கூறியது என்ன தெரியுமா?
பிரபல ரிவியில் நடைபெற்ற சரிகமப சீனியர் சீசனில் இரண்டாவது இடத்தை பிடித்த சபேசன் நடிகை தேவயானி தன்னிடம் பேசியதை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
சபேசன்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சி தான் சரிகமப ஆகும். இதில் இலங்கையைச் சேர்ந்த சபேசன் என்பவர் கலந்து கொண்டிருந்தார்.
வாழ்க்கையில் வெற்றியை பார்க்காத இவர், எப்பொழுதும் தனது கஷ்டத்தை நினைத்து மேடையில் கண்கலங்கும் இவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
சரிகமப நிகழ்ச்சி மூலம் சென்னை மட்டுமின்றி இலங்கை ரசிகர்களை தனது கட்டுக்கள் வைத்திருந்தார். இவர் மேடையில் பாடும் போதும், பேசும் வார்த்தைகள், கொடுக்கும் எமேஷ்னல் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.
இவர் இவ்வாறு எமேஷ்னலாக இந்த இடத்தைப் பிடித்து்ளார் என்று அநேகர் இழிவாக பேசிய நிலையில், அதற்கான பதிலடியை தற்போது கொடுத்துள்ளார். அதாவது தேவயானி சரிகமப செட்டில் இருக்கும் சபேசனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தேவயானி கூறியது என்ன?
குறித்த நிகழ்ச்சி பலரது வாழ்க்கையில் மாற்றத்தினை கொண்டு வந்துள்ளது. பலரும் சபேசன் அழுது பாடுவதைக் கண்டு வீண்பழிகளை கூறிவந்தனர். இந்நிலையில், பாடகர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர்.
டாப் 3 போட்டியாளர்களில் ஒருவரான சபேசன் கூறுகையில், தான் ஒரு இடத்திலும் அனுதாபத்திற்காக அழவில்லை. வாழ்க்கையில் எந்தவொரு இடத்திலும் தான் வெற்றியை பார்த்ததில்லை... அதனால் தான் அவ்வாறு அழுதுவிட்டேன்.

எதிர்மறையான கருத்துக்களைப் பார்த்து சோர்ந்து போயிருந்த போது தேவயானி மேடம் என்னிடம் வந்து நீ எந்த இடத்திலும் அழுது ஜெயிக்கவில்லை.
பாடல் பாடி அனைவரையும் மகிழ்வித்தே ஜெயித்துருக்க.. எதையும் நினைத்து கஷ்டப்படாதே... அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் என்பதே உனது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தேவயானியின் இந்த அறிவுரை சபேசனுக்கு மிகப்பெரிய உத்வேகத்தினைக் கொடுத்துள்ளதாக பேசியுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |