ஆசை ஆசையாய் கட்டிய நடிகை தேவயானியின் பண்ணை வீட்டை பார்த்திருக்கிறீர்களா? இதோ
நடிகை தேவயானியின் பண்ணை வீடு குறித்த புகைப்படங்களும், தகவல்களும் சமூகவைலத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை தேவயானி
1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. தமிழில் "தொட்டா சிணுங்கி" என்ற படத்தில் முதன்முதலாக அறிமுகமானார். இதனையடுத்து, கமல், விஜய், அஜித், சூர்யா, பார்த்திபன், அர்ஜூன் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து நட்சத்திர நாயகியானார். இவர் பார்ப்பதற்கு மட்டுமல்ல நடிப்பிலும் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பார்.
இதனாலேயே இல்லத்தரசிகளுக்கு தேவயானியை மிகவும் பிடிக்கும். என்னதான் பிரபல நடிகையாக வலம் வந்தாலும் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் தேவயானி.
இயக்குநர் ராஜகுமாரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நடிகை தேவயானியின் பண்ணை வீட்டை குறித்து சில தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பண்ணை வீடு
கணவர் ராஜகுமாரும், தேவயானியும் சேர்ந்து கடந்த 2015ம் ஆண்டு ஈரோடு மாவட்டம், அந்தியூரில் 5:30 எக்கர் நிலம் வாங்கி அதில் விவசாயம் செய்து வருகிறார்கள். அந்த இடத்திலேயே இவர்கள் ஒரு பண்ணை வீட்டையும் கட்டியிருக்கிறார்கள். மேலும், அந்த இடத்தில் போர் போட்டு, மா, பலா, வாழை போன்ற பல மரச் செடிகளையும், பூஞ்செடி, காய்கறிகள், பழங்களை வளர்த்து வருகிறார்கள்.
சென்னையில் வசித்து வரும் தேவயானி படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் பண்ணை வீட்டிற்கு சென்று விடுவாராம். அவர்கள் விளைவிக்கும் விவசாய பொருட்களில் ரசாயனம் ஏதும் பயன்படுத்தப்படுவது கிடையாதாம். இயற்கை உரங்களை மட்டும்தான் பயன்படுத்துவார்களாம். தற்போது நடிகை தேவயானி சின்னத்திரையில் நடித்து வருகிறார்.
இன்று நடிகை தேவயானியின் தனது 49து பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இவருக்கு நடிகர், நடிகைகள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை தேவயானியின் பண்ணை வீடு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.