நினைத்தாலே போதும்.. தேவயானி வீட்டில் மழை கொட்டும்! பண்ணை வீட்டு ரகசியம் என்னனு தெரியுமா?
நடிகை தேவயானியின் பண்ணை வீட்டில் ஒரே ஒரு பொத்தானை அழுத்தினால் மழை பெய்யும் அளவிற்கு வீட்டை பல வசதிகளுடன் கட்டி அமைத்துள்ளார்.
தேவயானி
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை தேவயானி.
இவர் ரஜினி கமல் அஜித் கமல்ஹாசன் விஜயகாந்த் பார்த்தீபன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்துள்ளார்.
இவர் நடித்த படங்களிலே இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்த படம் என்றால் அது காதல் கோட்டை படம் தான்.
இயக்குனர் ராஜகுமாரனை கடந்த 2001 ம் ஆண்டு காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இவருக்கு சென்னையில் மிகப்பெரிய சொந்த வீடு ஒன்று உள்ளது. இருப்பினும் தனது சொந்த ஊரான அந்தியூரில் பண்ணை வீடு ஒன்றையும் வைத்துள்ளார்.
பண்ணை வீடு
இந்த பண்ணை வீடு இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டின் நடுப்பகுதியில் பொத்தானை அழுத்தினால் மழை பெய்யுமாம்.
இது செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் அதிக வெயில் காலங்களில் இந்த செயற்கை மழை மூலம் தேவயானி குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக செலவிடுவார்களாம்.
இந்த வீட்டில் ஐந்து பெட்ரூம்கள் உள்ளன. வீட்டை சுற்றி சந்தன மரங்களும் கொய்யா மரங்களும் உள்ளன.
இயற்கை சூழலில் வாழ்வது தேவயானிக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இந்த அமைப்புடன் வீட்டை கட்டியுள்ளார்.
இந்த வீட்டில் பிளாஸ்டிக் உட்டில் பூஜை அறையை தயார் செய்து அதில் காலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை சூரியஒளி நேரடியாக பூஜை அறையின் மீது விழுவது போன்ற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மற்றும் தன் மகள்களின் புகைப்படங்களும் அவர்கள் வரைந்த ஓவியமும் வீட்டின் ஒவ்வொரு பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.