பிக்பாஸ் இந்த சீசனில் அதிரடியாக களமிறங்கும் பிரபலம்.. ப்ரோமோவில் உடைக்கப்பட்ட இரகசிய பூட்டு!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலத்திற்காக இந்த தடவை ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கியமான ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று.
இந்த நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவேற்றி விட்டு தற்போது ஏழாவது சீசனில் உழைகின்றது.
அத்துடன் இந்த தடவை பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு சர்ச்சைக்குரிய பிரபலங்கள் போட்டியாளர்களாக தெரிவுச் செய்யப்பட்டுள்ளார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வழமைக்கு மாறாக சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி விடுவார்கள்.
மீடியாப்பயணத்தை இதிலிருந்து ஆரம்பிப்போம் என நினைக்கும் போட்டியாளர்களுக்கு இது களமாக பார்க்கப்படுகின்றது.
வெளியான ப்ரோமோ
இந்த நிலையில், இந்த முறை பிக்பாஸ் வீட்டில் களமிறங்கி விளையாட போகும் பிரபலங்களின் பெயர்கள் இரகசியமாக வைக்கப்பட்டு வருகின்றது.
இவற்றை தாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒரு போட்டியாளர்களுக்காக பழைய போட்டியாளர்களை வைத்து ஒரு ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
யார் இந்த பிரபலம்? அப்போ இவர் தான் மக்களால் தெரிவு செய்யப்படும் பிரபலமா? இப்படிபல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருக்கின்றது.
அத்துடன் பிக்பாஸ் சீசன் 7 ல் இரண்டு வீடு என்பதால் சண்டைகள் எகிறும் என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.