இந்தியாவின் எல்லையில் இருக்கும் இந்த சுற்றுலா தலத்தை பார்த்ததுண்டா?
நமக்கு ஒரு நாட்டின் எல்லை என்றால் அது கலவரம் , பாதுகாப்பு படை, ராணுவம் என்று தான் நினைப்போம் .
ஆனால் இந்தியாவின் எல்லை பகுதிகளில் நிறைய சுற்றி பார்க்க கூடிய சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த இடங்களை மக்கள் ஏன் பார்க்கச் செல்கின்றனர் இதை பாாப்பதற்கான அவசியம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவின் எல்லை சுற்றுலாத்தலங்கள்
அந்த வகையில் பாபாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சாலையில் இரு நாடுகளின் எல்லைக்கு அருகில் வாகா அமைந்துள்ளது.
இது பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 29 கிமீ தொலைவிலும், இந்தியாவின் அமிர்தசரஸிலிருந்து 27 கிமீ தொலைவிலும் உள்ளது.
அட்டாரி வாகா எல்லையில் இரு நாடுகளின் கொடிகளை இறக்கும் தினசரி விழா நடைபெறும் இந்த விழாவை சுற்றுலாவாக பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றது.
பாங்காங் ஏரி இதை கேள்விப்பட்டதுண்டா? இதை மிகவும் அழகான ஏரி என்றே சொல்வார்கள். இது இந்தியா மற்றும் சீனாவின் எல்லைக்கு இடையில் அமைந்துள்ளது.
பல புலம்பெயர்ந்த பறவைகள் உட்பட பலவகையான பறவைகளுக்கு இந்த ஏரி ஒரு முக்கியமான இனப்பெருக்கம் செய்யும் இடமாக செயல்படுகிறது. இந்த இடத்திற்கு வருவதற்கு சுற்றுலாப்பயணிகள் ஈர்க்கப்படுகின்றனர்.
இது தவிர இன்னும் நிறைய சுற்றுலாத்தளங்கள் இந்த இந்தியாவின் எல்லைப்பகுதியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |