நடிகை நிரஞ்சனியை மணந்தார் கண்ணும் கண்ணும் பட இயக்குனர்.. குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள்!
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிரஞ்சனி. இவர், பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் நடிகை நிரஞ்சனியும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியும் காதலித்து வந்தனர். அவர்களது காதலுக்கு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததால், தற்போது இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
மேலும், அவர்களது திருமணம் இன்று காலை பாண்டிச்சேரியில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்களது திருமண புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். அதில் திரைப்பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.