Dermatologist rating: இனி இத சாப்பிடுங்க.. தலைமுடி வளர்ச்சி அதிகமாகும்!
தற்போது நம்மிள் பலருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று தான் தலைமுடி உதிர்வு.
தலைமுடி உதிரும் பொழுது அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டால் நாளடைவில் தலை வழுக்கியாகி விடும்.
தலைமுடி உதிர்வு பிரச்சினையை ஆரம்ப காலங்களில் சிகிச்சை கொடுத்தால் சரிச் செய்து விடலாம். அதே சமயம் கண்டுக்காமல் இருந்தால் தலையில் முடி இருக்காது.
இது தொடர்பான பிரச்சினைகளுக்கு சந்தையில் பல தீர்வுகள் இருந்தாலும், எதை நம்புவது என்ற பிரச்சினையை கிளம்பியுள்ளது. தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் பல பொருட்கள் சந்தையில் உள்ளன.
அதில் எதையெல்லாம் பயன்படுத்துவது என்பது சந்தேகமாக உள்ளது. அதற்கு மருத்துவர் ஒருவர் விளக்கம் கொடுத்து காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில், தலை மற்றும் தலைமுடிக்கு ஆரோக்கியம் என சாப்பிடும் உணவுகள் எந்தளவு உதவியாக இருக்கும் என்பதை பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.
உணவுகளுக்கு மருத்துவர் கொடுத்த புள்ளிகள்
1. முட்டை
முட்டையில் உள்ள சத்துக்கள் தலைமுடி பிரச்சினைகளுக்க மாத்திரம் முழு உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது. இதனால் இதற்கு 10/10 புள்ளிகளை மருத்துவர் கொடுத்திருக்கிறார். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகளை எடுக்கலாம். மஞ்சள் கருவை மாத்திரம் தவிர்ப்பது நல்லது.
2. வாழைப்பழம்
மலச்சிக்கல் பிரச்சினை, உடல் எடை அதிகரிப்பு உள்ளிட்ட நன்மைகளை கொடுக்கும் வாழைப்பழம் தினமும் ஒன்று சாப்பிடலாம். சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு அளவுடன் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு மருத்துவர் 8/10 புள்ளிகள் கொடுத்திருக்கிறார்.
3. மதுபானங்கள்
சிலர் மதுபானங்களை கொண்டு தலைமுடியை கழுவுவார்கள். இதனால் அவர்களின் தலைமுடி பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும் என நம்புகிறார்கள். இது தொடர்பான ஆய்வுகள் இதுவரையில் நடத்தப்படவில்லை. தலைமுடிக்கு மாத்திரமல்ல முழு உடலுக்கும் தீங்கு விளைவிக்கும். இதற்கு மருத்துவர் -100/10 புள்ளிகள் கொடுத்திருக்கிறார்.
4. சோடா
வாயு தொடர்பான பிரச்சினைகளுக்கு உதவியாக இருக்கும் சோடாக்கள் ஒருபோதும் உடலுக்கு ஆரோக்கியம் தராது. அளவுடன் குடிப்பது நன்று. இதற்கு மருத்துவர் 0/10 புள்ளிகள் கொடுத்திருக்கிறார். இது போன்ற பானங்களை முடிந்தளவு தவிர்ப்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
5. நட்ஸ், விதைகள்
உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் உணவுகளில் இதுவும் ஒன்று. தினமும் ஒரு அளவுடன் சாப்பிடலாம். இதனால் தலைமுடி முதல் சருமம் வரை அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கும். இதற்கு மருத்துவர் 10/10 புள்ளிகள் கொடுத்திருக்கிறார். உணவுடன் சாப்பிடலாம் மற்றும் பானங்கள் செய்து குடிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |