இந்தியாவில் 48 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ்... 3வது அலையின் முன்னோட்டமா?
இன்று மத்திய அரசு வெளியிட்ட தகவல் அடிப்படையில், “தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
45,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 48 பேருக்கு இதுவரை டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 20 பேர் மற்றும் மத்திய பிரதேசத்தில் 7 பேருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது” என தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் வகை கொரோனாவால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் டெல்டா வைரஸ் மரபணுவாக மாறி பின் டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது.
இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது. எனவே எதிர்ப்பு சக்தி மிகுந்தவர்களையும் புதிய வைரஸ் எளிதில் தொற்றக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மூன்று பேருக்கு இந்த வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
ஆனால், தற்போது மத்திய அரசு 9 பேருக்கு இந்த வகை கொரோனா தொற்று இருக்கிறது என தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.