இட்லி தோசைக்கு அருமையான தக்காளி சட்னி... ஒருமுறை இப்படி செய்து பாருங்க
இட்லி, தோசைக்கு ஏற்ற தக்காளி சட்னி கடலைப்பருப்புடன் சேர்த்து எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் இட்லி, தோசைக்கு சட்னி முக்கியமான காலை உணவாகும். அதிலும் இதற்கு துணையாக தேங்காய், தக்காளி சட்னிகளை சேர்த்து சாப்பிடுவது இன்னும் அட்டகாசமான சுவையை கொடுக்கின்றது.
தக்காளி சட்னியில் கடலைப்பருப்பு சேர்த்தால் சுவை மற்றும் ஊட்டச்சத்து அதிக ஊட்டச்சத்தும் கிடைக்கின்றது. தற்போது சட்னியினை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
தக்காளி - 3
வெங்காயம் - சிறிய துண்டு
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
வரமிளகாய் - 5
தேங்காய் - சிறிதளவு

செய்முறை
முதலில் கடலைப்பருப்பு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெயில் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும். பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளியை நன்றாக வதக்கி ஆற விட வேண்டும்.
முதலில் வறுத்த பொருட்களை கொரகொரப்பாக அரைத்து, பிறகு தக்காளி கலவையை சேர்த்து அரைக்க வேண்டும்.
அரைத்த சட்னியில் உப்பு, தண்ணீர் சேர்த்து சரியான பதத்திற்கு கொண்டு வர வேண்டும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்தால் சுவையான சட்னி தயார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |