சுவையான மாம்பழ கேசரி... வெறும் 10 நிமிஷம் மட்டும் போதும்
மாங்காய் சீசனில் சுவையான மாம்பழ கேசரி எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக கோடைகாலம் வந்துவிட்டாலே மாம்பழ சீசனும் ஆரம்பித்துவிடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
மாங்காயை விட மாம்பழத்தை தான் அதிகமாக அனைவரும் விரும்புவார்கள். மாம்பழத்தில் லஸ்ஸி, ஸ்மூத்தி, ஜாம் என செய்து சாப்பிட்டிருக்கும் நிலையில், மாம்பழ கேசரி செய்வது குறித்தும் தெரிந்து கொள்வோம்.
வெறும் 10 நிமிடத்தில் மாம்பழ கேசரி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
மாம்பழம் - 1
ரவை - 2 கப்
பால் - 2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - தேவையான அளவு
முந்திரி - 10
உலர் திராட்சை - 10
தண்ணீர் - 2 கப்

செய்முறை
முதலில் மாம்பழத்தின் சதைப்பகுதியை எடுத்து மிக்ஸியில் அடித்து தனியாக வைக்கவும். கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்க்கவும். முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து வதக்க எடுத்து தனியாக வைக்கவும்.
அதே நெய்யில் மிதமான தீயை வைத்து ரவையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளலாம். பாத்திரம் ஒன்றில் மாம்பழக்கூழ், சர்க்கரை, பால் மற்றும் தண்ணீர் இவற்றினை கலந்து அடுப்பில் வைத்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின்பு அடி கனமான மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, வறுத்த ரவை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ரவையை வேக வைத்து, அத்துடன் மாம்பழக்கூழ் கலவையை சேர்த்து கிளறி இறக்கினால் மாம்பழ கேசரி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |