வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் லெமன் பெப்பர் சிக்கன் செய்து அசத்துங்க
எவ்வளவு நாட்கள் தான் வீட்டில் ஒரே மாதிரி சிக்கன் சமைப்பது. ஒரே மாதிரி ஸ்டைலில் நீங்கள் சிக்கன் சமைக்கும் பொழுது வீட்டிலுள்ளவர்களுக்கு உங்கள் சமையல் பிடிக்காமல் போக வாய்ப்பு உள்ளது.
அந்த வகையில், ஹோட்டல்களில் மாத்திரம் இருக்கும் எலுமிச்சையின் புளிப்பில், மிளகின் காரத்துடன் சேர்த்து செய்யக்கூடிய சிக்கன் ரெசிபியை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே செய்யலாம்.
அப்படியாயின், வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு எப்படி ஹோட்டல் ஸ்டைல் லெமன் பெப்பர் சிக்கன் செய்யலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- சிக்கன் – 1 கிலோ
- எலுமிச்சை பழம் – 1 (பாதி + பாதி)
- மிளகுத்தூள் – 1 ½ டீஸ்பூன்
- உப்பு – 1 ¼ டீஸ்பூன்
- இஞ்சி பேஸ்ட் – 1 டீஸ்பூன்
- பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
- தயிர் – ¾ கப்
- சர்க்கரை – ½ டீஸ்பூன்
மரினேட் செய்முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் சிக்கன் போட்டு, எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், உப்பு, இஞ்சி பேஸ்ட் , பூண்டு, தயிர், சர்க்கரை ஆகிய பொருட்களை ஒன்றாக போட்டு நன்றாக கலந்து சிக்கனை ஒரு ஓரமாக வைத்து 30 நிமிடங்கள் மரினேட் செய்யவும்.
கார்ன்ஸ்டார்ச் கரைசல்
ஒரு சிறிய பவுலில் corn starch, அரை கப் தண்ணீர் ஊற்றில் கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். பால் போன்று மெல்லிய திரவமாக கலந்து வந்தால் cornstarch slurry தயார்!

சமைக்கும் முறை
ஒரு பெரிய பவுல் ஒன்றில் கொஞ்சமாக ஊற்றி, பட்டர் போட்டு சூடானதும், அதில் பிரியாணி இலை, 5–6 முழு மிளகு மற்றும் பட்டை சேர்த்து நன்றாக வதங்க விடவும்.
மரினேட் செய்த சிக்கன் துண்டுகளை மீண்டும் ஒவ்வொரு பக்கமாக வேக விட்டு, 2 நிமிடங்கள் அதே சூட்டில் வேக வைக்கவும். மரினேட் செய்து வைத்திருக்கும் சிக்கனை மிதமான தீயில் 25 நிமிடங்கள் வரை சமைக்கவும்.

அடுத்து, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் மற்றும் கார்ன்ஸ்டார்ச் கரைசல் ஆகியவற்றை ஊற்றி சிக்கன் சேதம் இல்லாமல் கிளறவும்.
சிக்கன் வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டால் சுவையான லெ லெமன் பெப்பர் சிக்கன் தயார். இதனை சப்பாத்தி, நாண், ரொட்டி அல்லது சாதம் உடன் சேர்த்து பரிமாறலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |