பரபரப்பான ஆட்டத்தில் சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதி செய்த பாவெல்! டெல்லிக்கு 4வது வெற்றி
ஐபிஎல் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது.
சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் 42 ரன்களும், நிதிஷ் ராணா, 57 ரன்களையும் அடித்திருந்தனர். 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி, பிரித்வி ஷா முதல் பந்திலே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அவரைத்தொடர்ந்து, களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 13 ரன்களில் பிரதீப் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த வார்னர் 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அக்சர் பட்டேல் 24 எடுத்து ரன் அவுட்டாக கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. அணியின் நம்பிக்கையாக இருந்த பவல் - தாக்குர் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தாகிட்ட இவ்வளவு கோடி சொத்து இருக்கா?
பாவெல் சரியான ஓவரைக் குறிவைத்து கடைசி நேரத்தில் அதிரடி காட்டினார். அதன்படி, பாவெல் சரியான ஓவரைக் குறிவைத்து கடைசி நேரத்தில் அதிரடி காட்டினார்.
யாரும் எதிர்பார்த்திராத வகையில் ஷ்ரேயஸ் ஐயர் 19-வது ஓவரை வீசினார். முதல் 4 பந்துகளில் ஷர்துல் தாக்குரால் ரன் எடுக்க முடியவில்லை.
இதனால், சற்று விறுவிறுப்பு அதிகரித்தது. 5-வது பந்தில் 1 ரன் எடுக்க, கடைசி பந்தில் பாவெல் சிக்ஸரை பறக்கவிட்டு வெற்றியை உறுதி செய்தார்.
19 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
#IPL2022 #DCvsKKKR
— CricketNext (@cricketnext) April 28, 2022
Kuldeep Yadav Stars as Delhi Capitals Condemn Kolkata Knight Riders to 5th Successive Defeat
In Pics: https://t.co/fVM6OsByf6 pic.twitter.com/vGRs35UIIT