20 முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சிறுமி! பகலில் வேடிக்கை பார்த்த கொடுமை
பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் இருக்கும் நிலையில் 16 வயது இளம்பெண் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் அதிர்ச்சி
டெல்லி ரோகினி பகுதியில் நேற்று மாலை சாக்ஷி என்ற 16 பெண்ணை, சாஹல் என்ற 20 வயது இளைஞர் ஒருவர் வழிமறித்து கொலை செய்துள்ளார்.
சுமார் 20க்கும் மேற்பட்ட தடவை கத்தியால் குத்தியும், கால்களால் மிதித்தும் தனது கோபத்தினை காட்டிய நபர் மேலும் கோபம் தீராததால் ஆத்திரத்தில் உச்சததிற்கே சென்று கல்லை தூக்கி தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.
இந்த காணொளி இன்று இணையத்தில் படுவைரலாகி பரவியதுடன், மக்கள் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர். குறித்த பெண் தாக்கி கொலை செய்யப்படும் போது அவரது அருகில் யாரும் போகாமல் வேடிக்கை பார்த்து சென்றது வேதனையின் உச்சமாக இருக்கின்றது.
பயத்தின் காரணமாக பொதுமக்கள் யாரும் அப்பெண்ணை காப்பாற்ற முன்வரவில்லை. தற்போது பெண்ணின் சடலத்தை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.