ஒரே குடும்பத்தில் தூக்கில் தொங்கிய 11 பேர்: ஒரே ஒரு நபரின் சுயநலம்! வெளிச்சத்திற்கு வந்த மர்மம்
கடந்த 2018ம் ஆண்டு டெல்லியை உலுக்கிய சம்பவம் என்றால் அது ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த 11 பேரின் தற்கொலை தான்.
டெல்லியில் உள்ள புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும் வயதான பெண்மணி ஒருவர் தரையில் சடலமாகவும் கிடந்துள்ளார்.
உயிரிழந்தவர்கள், நாராயண் தேவி (77), அவரது 2 மகன்கள் புவனேஷ் பாட்டியா (50), லலித் பாட்டியா (45), அவர்கள் மனைவி சவிதா (48), டினா (42), நாராயண் மகள் பிரதிபா (57), பேரக் குழந்தைகள் பிரியங்கா (33), நீது (25), மோனு (23), துருவ் (15), சிவம் (15) என்பது தெரிய வந்தது. அனைவரும் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது இது கொலையா? தற்கொலையா? என்று யாராலும் தெரிந்து கொள்ளமுடியாத அளவிற்கு மர்மமாக இருந்தது.
இந்நிலையில் குடும்பத்தினர் இறப்பின் மர்மம் என்ன என்பதைக் குறித்த காட்சியில் வெளியாகியுள்ளது.