காயத்துடன் மருத்துவரை தேடி ஓடிவந்த மான்: மருத்துவமனையில் நடந்த நெகிழ்ச்சி காட்சி
அமெரிக்காவில் மருத்துவமனை ஒன்றிற்குள் காயமடைந்த மான் ஒன்று மின்னல் வேகத்தில் ஓடிவந்ததுடன், எஸ்குலேட்டரில் பயணித்த காட்சி தீயாய் பரவி வருகின்றது.
இணையத்தில் பல காட்சிகள் காண்பவர்களை சிரிக்க வைத்து வரும் நிலையில், சில காட்சிகள் நம்மை சற்று உணர்ச்சி வசப்படவும் வைக்கின்றது.
அமெரிக்காவில் லூசியானாவில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு காயமடைந்த மான் ஓன்று கடந்த திங்கள்கிழமை வந்துள்ள காட்சி நெகிழ வைத்துள்ளது.
வழுக்கும் டைல்ஸ் தரையில் தடுமாறினாலும், தனது முயற்சியினை கைவிடாத மான் இரண்டாவது மாடிக்கு எஸ்கலேட்டரில் ஏறிச்சென்றுள்ளது.
இரண்டாவது மாடியில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் அதை ஒரு வழியாக பிடித்து சிகிச்சை அளித்து, படுக்கையில் வைத்துள்ளனர். பின்பு லூசியானா வனவிலங்கு மற்றும் மீன்வளத்துறையிலிருந்து வாகனம் ஒன்று வரவழைக்கப்பட்டு ஏற்றிச்சென்றுள்ளனர்.