ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதிக்கு என்ன குழந்தை பிறந்துள்ளது தெரியுமா?
ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதிக்கு பிறந்துள்ள குழந்தை தொடர்பான விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை தீபிகா படுகோன்.
இவர் பாலிவுட் மட்டுமல்லாது கோலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார்.
சினிமாவில் டாப் நடிகையாக இருக்கும் தீபிகா கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் ரன்வீரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்து சுமாராக 6 வருடங்கள் குழந்தையில்லாமல் இருந்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதி கடந்த பிப்ரவரி மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு, தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் இருவரும் ஜோடியாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
என்ன குழந்தை தெரியுமா?
Siragadikka Aasai: குடும்பத்தினர் முன்பு குற்றவாளியாக நிற்கும் மீனா... புதிதாக வந்த பிரியாணி பிரச்சனை
இந்த நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் மருத்துவமனையில் தீபிகா படுகோன் அனுமதிக்கப்பட்டார்.
இதன்போது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியானது.
இதனை தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதிபடுத்தியுள்ளார்.
ரசிகர்களும் திரையுலக நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |