கடற்கரை பகுதியில் பிரம்மாண்டமான சொகுசு பங்களா வாங்கிய தீபிகா படுகோனே.. விலையை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தீபிகா படுகோனே. இவர் நடிகர் ரன்பீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின்னும் இருவரும் சினிமாவில் பிஸியாகவே நடித்து வருகின்றனர். இதனிடையே ரன்வீர் சிங் தம்பதி மும்பையில் உள்ள அலிபாக் பகுதியில் 22 கோடி மதிப்பில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.
மேலும், இந்த இடம் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளதால், பல தொழிலதிபர்களும், திரை நட்சத்திரங்களும் இந்தப் பகுதியில் சொத்துக்களை வாங்கி முன் வருகின்றனர்.
நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர் சிங்கும் தற்போது மும்பையில் உள்ள பிரபாதேவி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
இது தவிர இவர்களுக்கு மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் சொத்துக்கள் உள்ளன.